உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கண்டமங்கலத்தில் மீண்டும் தோண்டப்பட்ட சர்வீஸ் சாலை; பொதுமக்கள் கடும் அவதி

கண்டமங்கலத்தில் மீண்டும் தோண்டப்பட்ட சர்வீஸ் சாலை; பொதுமக்கள் கடும் அவதி

கண்டமங்கலம் : கண்டமங்கலம் நான்கு வழிச்சாலையில் பணி முடிந்த, சர்வீஸ் சாலையை மீண்டும் தோண்டப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழி சாலை பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் மற்றும் கெங்கராம்பாளையம் மேம்பாலம் பணிகள் மட்டுமே எஞ்சி உள்ளது.கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்திற்கு வடக்கு மற்றும் தெற்கே சர்வீஸ் சாலை பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நிறைவடைந்தது. இந்த நிலையில் ரயில்வே மேம்பாலத்திற்கு வட கிழக்கே சுரங்கப்பாதையில் இருந்து கண்டமங்கலம் பழைய காவல் நிலையம் வரை 100 மீட்டர் துாரத்திற்கு ஏற்கனவே போடப்பட்ட சிமெண்ட் சாலை ராட்சத இயந்திரங்கள் மூலம் முற்றிலும் உடைத்து அகற்றப்பட்டுள்ளது. இதனால் சாலை கொத்து பரோட்டா போட்டது போல் கரடு, முரடாக மாறியுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ