மேலும் செய்திகள்
நுால் வாசிப்பு இயக்கம்
17-Aug-2024
திண்டிவனம்: திண்டிவனம் சாரம் பகுதியில் இயங்கி வரும் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான ஜூனியர் ரெட்கிராஸ் மற்றும் பாரத் சாரணர், சாரணியர் இயக்கத்திற்கான பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பாரத் சாரணர், சாரணியர் இயக்கத்தில் 50 மாணவ, மாணவிகளும், ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பில் 35 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக திண்டிவனம் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) சுமதி கலந்து கொண்டு பேசினார். பள்ளியின் முதல்வர் அந்தோணிசாமி முன்னிலை வகித்தார். பள்ளியின் தாளாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் பாலசுப்ரமணிய பாரதி, ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பின் மாநில பயிற்சியாளர் தண்டபாணி, பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகையன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பின் பொறுப்பாசிரியர்கள் சத்யா, அய்யனாரப்பன், பாரத் சாரணர், சாரணியர் இயக்கத்தின் பொறுப்பாசிரியர்கள் அய்னப்பேகம், நந்தகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியை ரஹமத்துன்னிசா நன்றி கூறினார்.
17-Aug-2024