| ADDED : ஜூன் 19, 2024 01:16 AM
விழுப்புரம் : விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வந்த முள் செடிகள் 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டது.விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு ரயில்வே மேம்பாலம் பகுதியில், இடது புறமாக காலியாக உள்ள இடங்களில் முள் செடிகள் வளர்ந்து வெட்டாமல் பராமரிப்பின்றி மேம்பாலத்தின் மீது தடுப்பு கட்டைகளை தாண்டி சாலையில் ஆக்கிரமித்து நீட்டிக் கொண்டிருந்தன.இதனால், வாகன ஓட்டிகள் இடதுபுறமாக வரும்போது, முள் செடிகள் உரசி பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்தது.இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து, விழுப்புரம் நகராட்சி கமிஷனர் ரமேஷ் உத்தரவின் பேரில், நகர சுகாதார அலுவலர் மதன்குமார் தலைமையில் ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மூலம், ரயில்வே பாலத்தையொட்டி நீண்டு வளர்ந்திருந்த முள் செடிகள் வெட்டி அகற்றப்பட்டன.