| ADDED : மே 26, 2024 05:34 AM
திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிப்பதற்கு நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டிவனம் நகர்மன்ற கூட்டத்தில், கட்சி வித்தியாசமின்றி அனைத்து கவுன்சிலர்களும், நகரத்தில் சுற்றித்திரியும் நாய்கள், பன்றிகளை பிடிக்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தும், நகராட்சி அதிகாரிகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. சமீபத்தில் ஒத்தவடை தெருவில் முதியவர் ஒருவரை வெறி நாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் பன்றிகள் கும்பல், கும்பலாக மேய்கின்றது. குறிப்பாக வசந்தபுரம், கங்கா நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக பன்றிகள் திரிகின்றது. இதுபற்றி பல முறை நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், பன்றிகளை பிடிக்கவில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் திரிவதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி அதிகாரிகள் பன்றிகளை பிடிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.