உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒரே இரவில் 3 கோவில்களில் கொள்ளை

ஒரே இரவில் 3 கோவில்களில் கொள்ளை

திண்டிவனம் : திண்டிவனம் அருகே ஒரே இரவில் 3 கோவில்களில் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளை போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டிவனம் அடுத்த ஆவணிப்பூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூசாரியாக இருப்பவர் செங்கேணி, 75; இவர், நேற்று காலை கோவில் திறக்க வந்தபோது, முன்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்டு, அம்மன் நெற்றியில் இருந்த 1 சவரன் தங்கத்திலான பொட்டு கொள்ளை போயிருந்தது.இதேபோல் சேந்தமங்கலம் பாலமுருகன் கோவிலின் பூட்டை உடைத்து, முருகன் நெற்றியில் இருந்த 250 கிராம் எடையுள்ள வெள்ளிக் கவசம் கொள்ளை போயிருந்தது.மேலும், இதே பகுதியில் காளியம்மன் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.ஒரே இரவில் ஆவணிப்பூர், சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள 3 கோவில்களில் நடந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ