உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓய்வு பெற்ற ஆலை மேலாளரிடம் ரூ.1.87 லட்சம் அபேஸ்

ஓய்வு பெற்ற ஆலை மேலாளரிடம் ரூ.1.87 லட்சம் அபேஸ்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் பட்டப்பகலில் ஓய்வு பெற்ற ஆலை அலுவலரிடம் 1.87 லட்சம் ரூபாய் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுாரைச் சேர்ந்தவர் சதாசிவம், 60; முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், நேற்று மதியம் 12:00 மணியளவில் விக்கிரவாண்டி இந்தியன் வங்கி கணக்கிலிருந்து ஒரு லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். அந்த பணத்தை தனது டிஸ்கவர் பைக் டேங்க் கவரில் வைத்துக் கொண்டு ஒயின் ஷாப் எதிரே நிறுத்தி விட்டு உள்ளே சென்று திரும்பி வந்து பார்த்தபோது, டேங்க் கவரிலிருந்த பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து அவர், விக்கிரவாண்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி, மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ