உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டெம்போவில் மணல் கடத்தியவர் கைது

டெம்போவில் மணல் கடத்தியவர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் நேற்று காலை, பிடாகம் தென்பெண்ணையாறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, சாலாமேடு புதுநகர் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன் மகன் அருள், 23; என்பவர், அந்த வழியாக டெம்போவில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ