உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் தண்ணீரின்றி காயும் அவலம்

நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் தண்ணீரின்றி காயும் அவலம்

மயிலம் : மயிலம் ஒன்றியத்தில் உள்ள தீவனுார், கோபாலபுரம் பகுதியில் சாலையோரத்தில் புதியதாக நடப்பட்ட மரக்கன்றுகள் தண்ணீரின்றி காயும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.மயிலம் பகுதியில் வெள்ளிமேடுபேட்டையில் இருந்து மயிலம் வரை செல்லும் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.இந்த மரக்கன்றுகளுக்கு போதிய தண்ணீர் ஊற்றாததால் காய்ந்து வருகிறது. எனவே புதிதாக நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை