| ADDED : மே 07, 2024 05:46 AM
செஞ்சி : செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாணவர்கள் சாதனை படைத்தனர்.இப்பள்ளியில் தேர்வு எழுதிய 141 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவர் ராம்குமார் 600க்கு 592, ராமானுஜம் 590, ரஞ்சன், விக்னேஷ் ஆகியோர் 588 மதிப்பெண் பெற்று முதல் 3 சிறப்பிடங்களைப் பிடித்துள்ளனர்.கணிதம் பாடத்தில் 30 மாணர்கள், உயிரியலில் 28, வேதியியலில் 23, கணினி அறிவியலில் 11, இயற்பியலில் 7 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். தமிழ் பாடத்தில் 4 மாணவர்கள் 99 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 1 மாணவர் 97 மதிப்பெண்ணும் பெற்று சாதனை படைத்தனர்.மேலும் 590க்கு மேல் 2 மாணவர்கள், 580க்கு மேல் 25 மாணவர்கள், 570க்கு மேல் 21 மாணவர்கள், 550க்கு மேல் 44 மாணவர்கள், 550க்கும் கீழ் 49 மாணவர்கள் பெற்றுள்ளனர். சராசரி மதிப்பெண்ணாக 553 மதிப்பெண் எடுத்திருந்தனர். இது கடந்த ஆண்டை விட 12 சதவீதம் கூடுதலாகும்.பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை பள்ளி தாளாளர் கலைச்செல்வன் பாராட்டினார். பள்ளி முதல்வர் சிவசங்கரி, நிர்வாக அலுவலர் அருள் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.