உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செம்மண் குவாரி வழக்கு: மாஜி டி.எஸ்.பி., சாட்சியம்

செம்மண் குவாரி வழக்கு: மாஜி டி.எஸ்.பி., சாட்சியம்

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., சாட்சியம் அளித்தார்.விழுப்புரம் மாவட்டம், பூத்துறை குவாரியில் அளவுக்கு அதிகமாக, செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உட்பட 8 பேர் மீது, கடந்த 2012ம் ஆண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் மொத்தமுள்ள 67 சாட்சிகளில் இதுவரை 35 பேர் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 28 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். நேற்று அரசின் 36வது சாட்சியான ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., சேகர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.அப்போது அவர், ''விழுப்புரம் உட்கோட்ட டி.எஸ்.பி.,யாக நான் பணியாற்றியபோது, அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தினோம். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இருந்தனர். சோதனையின் போது ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை'' என்றார்.அதனை பதிவு செய்த நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணை நாளை (இன்று 23ம் தேதி) தொடரும் என ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ