உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓட்டுசாவடி மையங்களுக்கு ஓட்டு பெட்டிகள் அனுப்பி வைப்பு

ஓட்டுசாவடி மையங்களுக்கு ஓட்டு பெட்டிகள் அனுப்பி வைப்பு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக ஓட்டு சாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஒட்டுப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் அனுப்பி வைத்தார்.விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. இதற்காக நேற்று தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்திலிருந்து ஓட்டுச்சாவடி மையங்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி தலைமையில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், மாவட்ட எஸ்.பி., தீபக் சுவாச் ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் 276 வாக்குச்சாவடி மையங்களுக்கு 552 ஓட்டுப்பதிவு மற்றும் தலா 276 வி.வி. பேட் கண்ட்ரோல் யூனிட்களை அனுப்பி வைத்தனர்.பின்னர் கலெக்டர் பழனி நிருபர்களிடம் கூறியதாவது.விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் பணிக்காக தொகுதியில் உள்ள 276 ஓட்டுச் சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.331 ஓட்டு சாவடி தலைமை அலுவலர்களும் மற்றும் நிலை அலுவலர்கள் என மொத்தம் 1355 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.ஓட்டுச்சாவடிகளில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 44 ஓட்டு சாவடிகள் பதற்றமானவையாக கண்டறி பட்டு அப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று (நேற்று) அனைத்து ஓட்டு சாவடிகளுக்கும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக்டர் பழனி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ