உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

செஞ்சி : சிங்கவரம் ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருஞ்சனம் நடந்தது. தொடர்ந்து வேள்வியும் காலை 8:30 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து கொடியேற்றம் நடந்தது.நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், உபயதாரர் திருஞானசம்மந்தம், தேர் திருப்பணிக்குழு முன்னாள் தலைவர் குணசேகர், ஊராட்சி தலைவர் பராசக்தி தண்டபாணி, விழா குழுவினர் ரங்கராஜ், இளங்கீர்த்தி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாரானையும், பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடக்கிறது. முக்கிய விழாவான தேர் திருவிழா வரும் 8ம் தேதி நடக்கிறது.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி