உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணக்குள விநாயகர் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

மணக்குள விநாயகர் கல்லுாரியில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

விழுப்புரம்: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் இயந்திரவியல் துறை மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி கல்விக்குழும தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், இயக்குனர் வெங்கடாஜலபதி முன்னிலை வகித்தனர். மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை டீன் வேல்முருகன் வரவேற்றார்.சென்னை சைக்கோட் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி குமாரசுப்ரமணியன், இயந்திரவியல் பொறியாளர்களுக்கான வாய்ப்புகள், சவால்கள் பற்றியும், உற்பத்தி சார்ந்த துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நவீன தொழிற்சாலைகளில் மென்பொருள் துறையின் ஆதிக்கம், இயந்திரவியல் பொறியாளர்கள் இந்த சவால்களை சந்திக்க தங்களை தயார்படுத்தி கொண்டு வாழ்வில் நிலைநிறுத்தி கொள்வது பற்றி சிறப்புரையாற்றினார்.டீன் அறிவழகர் வாழ்த்துரை வழங்கினார். இயந்திரவியல் துறை தலைவர் சோழமன்னன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !