| ADDED : ஜூன் 16, 2024 11:48 PM
வானுார்: புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு ஸ்கூட்டரில் குட்கா பொருட்கள் கடத்திய நபரை போலீசார் கைது செய்து, 15 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.கிளியனுார் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் நேற்று புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.தென்கோடிப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 15 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.விசாரணையில், புதுச்சேரி மாநிலம், ராமநாதபுரம் ஆஸ்பிட்டல் ரோட்டைச் சேர்ந்த காத்தவராயன், 56; என்பதும், புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு குட்கா புகையிலை பொருட்கள் சப்ளை செய்ய எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.அதன் பேரில் காத்தவராயனை போலீசார் கைது செய்து, குட்கா பொருட்கள் மற்றும் ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.