உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்கூட்டரில் புகுந்த பாம்பு: விழுப்புரத்தில் பரபரப்பு

ஸ்கூட்டரில் புகுந்த பாம்பு: விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் நின்றிருந்த ஸ்கூட்டரில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம், வி.மருதுார், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி ஜெயப்பிரியா, 32; இவர், திருச்சி சாலையில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். நேற்று காலை 9:00 மணிக்கு மேல் வழக்கம் போல் தனது ஸ்கூட்டரில் பணிக்கு சென்றார்.காலை 11:45 மணியளவில் ஸ்கூட்டரின் பின்பகுதியில் உள்ள பெட்ரோல் டேங்கிற்கு கீழ் பகுதியில், பாம்பு புகுந்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு நிலையத்தினர் ஷாஜகான் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடம் போராடி, 6 அடி நீளமுள்ள கொம்பேரி மூக்கன் பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ