உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அனுமதியின்றி பாட்டு கச்சேரி: ஊராட்சி தலைவர் மீது வழக்கு 

அனுமதியின்றி பாட்டு கச்சேரி: ஊராட்சி தலைவர் மீது வழக்கு 

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அனுமதியின்றி பாட்டுகச்சேரி நடத்தியதாக, ஊராட்சி தலைவர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த எஸ்.மேட்டுப்பாளையம் கிராமத்தில், கடந்த 22ம் தேதி தண்டுமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதற்காக கோவில் எதிரில், அன்றைய தினம் இரவு உரிய அனுமதியின்றி பாட்டு கச்சேரி நடந்தது.இது குறித்து, வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் அளித்த புகாரின் பேரில், கிராம ஊராட்சி தலைவர் சுரேஷ் உட்பட 5 பேர் மீது, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி