உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாநில அளவிலான ஊஷூ விளையாட்டுப் போட்டி

மாநில அளவிலான ஊஷூ விளையாட்டுப் போட்டி

திண்டிவனம், : திண்டிவனத்தில் மாநில அளவிலான ஊஷூ விளையாட்டுப் போட்டி துவங்கியது.திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் உள்ள தரம்சந்த் ஜெயின் பள்ளியில் நடந்த போட்டியை ஊஷூ அசோசியேஷன் மாநில தலைவர் அலெக்ஸ் அப்பாவு, பொதுச் செயலாளர் ஜான்சன், தரம்சந்த் பள்ளி சேர்மன் பப்ளாசா, நிர்வாகி அனுராக் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.போட்டியில், தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களிலிருந்து 350 அணிகள் பங்கேற்றன. இதில் ஜூனியர், ஜூனியர் யூத், சீனியர் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. இறுதிப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள், வரும் 26ம் தேதியிலிருந்து 31ம் தேதி வரை கோயம்புத்துாரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான ஊஷூ போட்டியில் பங்கேற்பர்.போட்டிக்கான ஏற்பாடுகளை ஊஷூ அமைப்பின் மாநில துணைத் தலைவர் ஜின்ராஜ், துணைச் செயலாளர் நவகோடிநாராண மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் விஜயபாரத், ஏழுமலை, ஜெயச்சந்திரன், கோபிநாத் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை