உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளியில் மாணவி  தற்கொலை முயற்சி

அரசு பள்ளியில் மாணவி  தற்கொலை முயற்சி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தாய் திட்டியதால் அரசு பள்ளியில் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.காணை அரசு மேல்நிலை பள்ளியில், பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவர், நேற்று மதியம் 1.30 மணிக்கு, வீட்டில் தாய் திட்டியதை நினைத்து மனவேதனையில் தண்ணீரில் எறும்பு மருந்து கலந்து குடித்து, சற்று நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார். இது குறித்து சக மாணவிகள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பள்ளிக்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.காணை போலீசார் விசாரிக்கின்றனர். அரசு பள்ளியில் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காணை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி