மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
4 hour(s) ago
தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
4 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஆர்வத்தோடு மாணவ, மாணவிகள் வந்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டுக்கான ஆண்டு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை நடந்து முடிந்தது. இதனையடுத்து, கோடை விடுமுறை விடப்பட்டது. கல்லுரிகளுக்கும் செமஸ்டர் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டது.இதனையடுத்து, கோடை விடுமுறை முடிந்து, நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த கல்வியாண்டிற்கான 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகள் நேற்று காலை வகுப்புகள் தொடங்கியது. விழுப்புரத்தில் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி, பீமநாயக்கன் தோப்பு நகராட்சி மேல்நிலை பள்ளிகளுக்கு காலை 8:30 மணி முதல் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர். அவர்களை வகுப்பு ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.இதே போல், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் வரவேற்றனர். அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும், முதல் நாளில் இலவச பாட புத்தகங்கள், புத்தக பைகளும் வழங்கப்பட்டன.
4 hour(s) ago
4 hour(s) ago