உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் விழுப்புரத்தில் திடீர் ரயில் மறியல் போராட்டம்

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் விழுப்புரத்தில் திடீர் ரயில் மறியல் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட மனு தாக்கல் செய்வதற்காக தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 39 விவசாயிகள் கன்னியாகுமரி -வாரணாசி விரைவு ரயிலில் நேற்று காலை திருச்சியில் இருந்து புறப்பட்டனர். இதற்காக அவர்கள் எஸ்-1 கோச்சில் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் எஸ்-1 கோச் பழுது காரணமாக ரத்து செய்யப்பட்டதால், அய்யாக்கண்ணு உள்ளிட்ட 39 பேரையும் மாற்று கோச்களில் ரயில்வே ஊழியர்கள் அமர வைத்தனர்.இதனை கண்டித்தும், 39 பேருக்கும் ஒரே கோச் வழங்க வலியுறுத்தி அய்யாக்கண்ணு உள்ளிட்ட 39 பேர் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரத்தில் தனி கோச் இணைத்து தருவதாக ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனையேற்று விவசாயிகள் அதே ரயிலில் வந்தனர்.இந்த ரயில் 4 மணி நேரம் தாமதமாக மதியம் 12:20 மணிக்கு, விழுப்புரம் வந்தது. அங்கு தனி கோச் வழங்காததால், அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் ரயில் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.அவர்களிடம், விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி., பெருமாள், டி.எஸ்.பி., சுரேஷ், ரயில் நிலைய மேலாளர் ராஜன் உள்ளிட்டோர், 'ரெட் கோச்' வசதி விழுப்புரத்தில் இல்லை. அதனால், அரக்கோணத்தில் ஒரு 'ரெட் கோச்' இணைத்து, முன்பதிவு செய்தவர்களை அதில் மாற்றி அனுப்புவதாக உறுதியளித்தனர்.இதனையேற்று போராட்டத்தை கைவிட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட 39 பேரை எஸ்-4, எஸ்-5 ஆகிய கோச்களில் அமர வைத்ததை தொடர்ந்த மதியம் 1:00 மணிக்கு ரயில் புறப்பட்டது.இந்த மறியல் போராட்டத்தால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி