உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கரும்பு நடவு ஊக்குவிப்பு கூட்டம்

கரும்பு நடவு ஊக்குவிப்பு கூட்டம்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு நடவு ஊக்குவிப்பு கூட்டம் நடந்தது.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அருங்குறுக்கை, எல்ராம்பட்டு கிராமங்களில் கரும்பு விசாயிகளுக்கு கரும்பு நடவு ஊக்குவிப்பு கூட்டத்திற்கு கரும்பு பெருக்கு அலுவலர் பொன்னுரங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை செயலாட்சியர் முத்து மீனாட்சி 2023-24 அரவை பருவத்திற்கு கரும்புக்கு விலையாக டன் ஒன்றுக்கு 2915.75 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் இத்துடன் அரசு அறிவித்த ஊக்கதொகை 215 ரூபாய் வரையில் வழங்கப்படும் என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து கரும்பு பெருக்கு அலுவலர் பொன்ரங்கம் கரும்பு உற்பத்தியை பெருக்கிட தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டம் ஆகியவை செயல்படுத்தபட்டு வருகிறது. எனவே விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற கேட்டுகொண்டார் கூட்டத்தில் ஆள்ளில்லா வான்கருவி மூலம் பொக்கே போயிங் நோயை கட்டுபடுத்தும் முறை விவசாயிகளுக்கு செயல் விளக்கம் காட்டப்பட்டது. கரும்பு அலுவலர் கேசவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி