| ADDED : ஏப் 30, 2024 11:21 PM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில், கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடக்கிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட விளையாட்டரங்கில், விளையாட்டுத் துறை சார்பில், கடந்த 29ம் தேதி முதல் கோடை கால பயிற்சி முகாம் துவங்கியது. வரும் மே 13ம் தேதி வரை முகாம் நடக்கிறது.இந்த பயிற்சி முகாமில், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சியளிக்கப்படும். தடகளம், கபடி, கைப்பந்து, மல்லர் கம்பம், வாலிபால் ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படும். முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்கலாம்.காலை 6:00 மணி முதல் 8:30 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் 6:30 மணி வரையும் பயிற்சியளிக்கப்படும். பயிற்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்களுக்கு தினமும் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும். முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் 200 ஆகும்.கட்டண தொகையினை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஜிபே, போன்பே, யு.பி.ஐ., முறையில் செலுத்த வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர்களை பயிற்சி முகாம் நடைபெறும் இடத்தில், நேரடியாக மாவட்ட விளையாட்டரங்கம், அரசு கலைகல்லுாரி அருகில் கீழ்பெரும்பாக்கம் என்ற முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு 87547 44060, 63817 99370 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.