மேலும் செய்திகள்
கண்டமங்கலத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
05-Sep-2024
கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியம் அற்பிசம்பாளையம் கிராமத்தில், சணப்பை பசுந்தாள் உரப்பயிர் சாகுபடியை வட்டார வேளாண் அலுவலர் சுமதி கள ஆய்வு மேற்கொண்டார்.கண்டமங்கலம் வட்டாரத்தில் தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து, மண்ணுயிர் காப்போர் திட்டத்தின் கீழ் மண் வளத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 11 ஆயிரத்து 650 கிலோ சணப்பை பசுந்தாள் உர விதைகள் 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கண்டமங்கலம் ஒன்றியம் அற்பிசம்பாளையம் கிராமத்தில் விவசாயி கணேசன் தனது விவசாய நிலத்தில் சணப்பை பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்துள்ளார். இந்த உரப்பயிரை கண்டமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுமதி கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வேளாண்மை அலுவலர் விஜய், துணை வேளாண்மை அலுவலர் சுப்புராஜ், உதவி வேளாண்மை அலுவலர்கள் சீனுவாசன், பரிமளா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருள்பாபு, வீரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
05-Sep-2024