உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பேசும் பெருமாள் கோவில் தேர் திருவிழா

பேசும் பெருமாள் கோவில் தேர் திருவிழா

வானுார் : குமளம்பட்டு பேசும் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது.இக்கோவிலில் 3ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 17ம் தேதி முதல் தினமும் இரவு 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. 23ம் தேதி பல்லக்கு வீதியுலா நடந்தது.தொடர்ந்து நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளச் செய்தனர். பின், 9:00 மணிக்கு திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.நாளை 27ம் தேதி தீர்த்தவாரி மற்றும் திருக்கல்யாணம் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழுவினர் மற்றும் விழா அமைப்பாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை