உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டாரஸ் லாரி சிறைபிடிப்பு: பொதுமக்கள் போராட்டம்

டாரஸ் லாரி சிறைபிடிப்பு: பொதுமக்கள் போராட்டம்

மரக்காணம் : மரக்காணம் அருகே கல்குவாரியில் லோடு ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரிகளால் சாலை சேதமடைந்ததை கண்டித்து பொதுமக்கள் லாரியை சிறை பிடித்து போராட்டடத்தில் ஈடுபட்டனர்.மரக்காணம் அடுத்த பிரம்மதேசத்தில் இருந்து மண்டம் பெரும்பாக்கம், கீழ்பூதேரி சாலை வழியாக, தென்னம்பூண்டியில் உள்ள கல்குவாயில் தினமும் 50க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் ஜல்லி லோடு ஏற்றிச் செல்கின்றன.இதனால் பிரம்மதேசத்தில் இருந்து மண்டம் பெரும்பாக்கம், கீழ்பூதேரி, தென்னம் பூண்டி உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் தார்சாலை மண் சாலையாக மாறி குண்டும், குழியுமானது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக டாரஸ் லாரிகள் செல்லும் போது, சேறும், சகதியுமாக நடந்து செல்வோர் மற்றும் பைக்கில் செல்வோர் மீது தெறித்தது.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஜல்லி ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரிகள் செல்வதால் அப்பகுதி முழுதும் வீடுகளில் புழுதி படர்கிறது. மழை பெய்தால் சாலை சேறும் சகதியுமாகிறது.இதுகுறித்து வருவாய் மற்றும் காவல் துறையினரிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை எனக் கூறி நேற்று காலை 9:30 மணியளவில் மண்டம் பெரும்பாக்கம் வழியாக வந்த 10க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின் 11:30 மணிக்கு சிறைபிடித்த டாரஸ் லாரியை விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை