உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

வானுார்: கிளியனுார் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கிளியனுார் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். மொளசூர் அய்யனார் கோவில் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரைப் பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில், மொளசூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வமணி மகன் லீசா (எ) ருத்ரகுமார், 20; என தெரியவந்தது. உடன் அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்