உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமி குளித்ததை வீடியோ எடுத்தவர் கைது

சிறுமி குளித்ததை வீடியோ எடுத்தவர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அருங்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் விஸ்வநாதன்,29; இவர், பினாயில், ஆலா வியாபாரம் செய்கிறார். இவர், டி.எடப்பாளையம் கிராமத்தில் நேற்று வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள ஒரு வீட்டின் பின்னால் 6 வயது சிறுமி குளித்து கொண்டிருந்ததை, விஸ்வநாதன் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தார்.அதனைக் கண்ட சிறுமியின் உறவினர் மற்றும் கிராம மக்கள் விஸ்வநாதனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவரை திருவெண்ணெய்நல்லுார் போலீசார் மீட்டு, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து விஸ்வநாதனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை