உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பேலட் பேப்பர் பொருத்தும் பணி

ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பேலட் பேப்பர் பொருத்தும் பணி

விழுப்புரம்: விழுப்புரம் தொகுதியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பேலட் பேப்பர் பொருத்தும் பணிகள் நடந்தது.லோக்சபா தேர்தலை யொட்டி, விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதியில் பயன்படுத்தவுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், திண்டிவனம் சப்- கலெக்டர் அலுவலகம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வானுார் தாசில்தார் அலுவலகத்தில் இந்த தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் கொண்ட பேலட் பேப்பர் பொருத்தும் பணிகள் நடந்தது.விழுப்புரம் தாசில்தார் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்த பணிகளை, மாவட்ட தேர்தல் அதிகாரி பழனி ஆய்வு செய்தார். கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வான 5 சதவீத ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், ஆயிரம் ஓட்டுகள் வீதம் மாதிரி ஓட்டுப்பதிவு செய்து முடிவுகள் சரிபார்க்கும் பணி நடந்தது. ஓட்டுப்பதிவு கருவியில் அனைத்து வேட்பாளர்களின் சின்னம் பொருத்திய பின், ஓட்டளிக்கும் பட்டன் சரியான முறையில் இயங்குகிறதா என உறுதி செய்யப்பட்டது. இதில், சப்-கலெக்டர் திவ்யான்ஷூ நிகம், தாசில்தார் காஜா சாகுல் அமீது, உதவி ஆணையர் (கலால்) முருகேசன், தாசில்தார் வசந்த கிருஷ்ணன் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை