உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துளுக்காத்தம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

துளுக்காத்தம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

வானுார்: வானுார் அடுத்த பூத்துறை துளுக்காத்தம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இக்கோவில் திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. கடந்த 30ம் தேதி பற்பகல் 3:00 மணிக்கு செடல் திருவிழா நடந்தது.இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் காத்தவராயன் - கருப்பழகி சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.அதனையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை