மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
5 hour(s) ago
தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
5 hour(s) ago
லட்சுமி நாராயாண பெருமாள் கோவிலில் சிறப்பு அபிேஷகம்
5 hour(s) ago
விழுப்புரம் : விழுப்புரம் மகாராஜபுரம் சிவன் கோவிலில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோவில், புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கோவிலை புதுப்பித்து, கற்கோவில் அமைக்கும் பணிகளை, ஸ்ரீமீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோவில் நிர்வாக அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவில் திருப்பணிகள் விரைவில் நிறைவடைய வேண்டி, நேற்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.முன்னதாக சிவபக்தர்கள் குழுவினர் திருவாசகம் உள்ளிட்ட பன்னிருதிருமுறைகள் அடங்கிய புத்தகங்களை ஏந்தி, ஊர்வலம் சென்றனர். கோவில் வளாகக்த்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் இசைத்தபடி சென்ற பக்தர்கள் ஊர்வலம், கிழக்கு பாண்டி ரோடு ஏழை மாரியம்மன் கோவில் வரை சென்று திரும்பியது. பின்னர், கோவில் வளாகத்தில் திருவாசகம் முற்றோதல் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago