உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் நகர தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் 

திண்டிவனம் நகர தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் 

திண்டிவனம் : திண்டிவனத்தில் நகர தி.மு.க.,செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. திண்டிவனத்திலுள்ள ஆர்யாஸ் ஓட்டலில் நடந்த கூட்டத்திற்கு, நகர அவைத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் மஸ்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,பொறுப்பாளர் டாக்டர் சேகர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், சீத்தபாதிசொக்கலிங்கம், மாவட்ட பொருளாளர் ரமணன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், பழனி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், பாபு, வழக்கறிஞர்கள் ஆதித்தன், அசோகன், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி, விளையாட்டு அணி சந்திரன், அயலக அணி முஸ்தபா, தொண்டர் அணி ராஜசக்தி, பொருளாளர் ராஜேந்திரன், நகர துணை செயலாளர் கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .பாக்ஸ் மேட்டர்கூட்ட நோட்சில் பெயர் போடுவதில் குழப்பம்தி.மு.க.,கூட்டம் தொடர்பான நோட்டீசில் வழக்கமாக மாநில நிர்வாகிகள் டாக்டர் மாசிலாமணி, சேதுநாதன், செஞ்சிசிவா, செந்தமிழ்செல்வன் பெயரை போட்டு வந்தனர். இந்நிலையில் நகர செயல்வீரர்கள் கூட்ட முதல் நோட்டீசில் மாநில நிர்வாகிகள் பெயர்கள் இடம் பெறவில்லை. இதனால் செயல்வீரர்கள் கூட்டத்தில் பிரச்னை உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரண்டாவதாக வேறு ஒரு நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டது. அதில் மாசிலாமணி, சேதுநாதன் பெயரை மட்டும் சேர்த்து மீண்டும் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை