உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

விக்கிரவாண்டியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி நடந்தது.விழுப்புரம் லோக்சபா தேர்தலையொட்டி, விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள 275 ஓட்டுச் சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் அலுவலருக்கான பயிற்சி லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்தது.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமை தாங்கி, பயிற்சி பெறும் அலுவலர்களிடம் தேர்தலின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் தங்களது ஜனநாயக கடமையாற்றும் வகையில், தபால் ஓட்டுகளை செலுத்துவது குறித்தும் விளக்கம் அளித்தார்.தாசில்தார் யுவராஜ், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம், வட்ட வழங்க அலுவலர் விமல்ராஜ், தேர்தல் தனி தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர்கள் தெய்வீகன், தயாநிதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ