மேல்மாம்பட்டில் மரக்கன்று நடும் விழா
அவலுார்பேட்டை : ல்மாம்பட்டு ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.தமிழ்நாடு வி.ஏ.ஓ., முன்னேற்ற சங்கம், மேல்மலையனுார் கோவில் நகர லயன்ஸ் கிளப் சார்பில் மேல்மாம்பட்டு ஏரிக்கரை பகுதியில் 50 புளிய மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.ஊராட்சி தலைவர் முனியம்மாள் தலைமை தாங்கினார். லயன்ஸ் கிளப் தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். வி.ஏ.ஓ., காளிதாஸ் வரவேற்றார்.தாசில்தார் தனலட்சுமி, மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார். இதில் பாண்டிதுரை, அரசு, நிவேதிதா, முருகன் , செந்தில், வி.ஏ.ஓ., வின்சென்ட் சகாயராஜ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.