உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓட்டல் ஊழியர் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

ஓட்டல் ஊழியர் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் போலீசார் தாக்கியதில் இறந்ததாக புகார் கூறப்படும் ஓட்டல் ஊழியர் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று, பொது நல இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன.விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்தவர் ஓட்டல் ஊழியர் ராஜா,43; இவரை, கடந்த மாதம் விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதால் இறந்ததாக அவரது மனைவி அஞ்சு வழக்கு தொடர்ந்தார். சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, ராஜாவின் உடல் கடந்த 22ம் தேதி தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து, விழுப்புரத்தில் அரசியல் கட்சிகள், பொது நல இயக்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில் ராஜாவின் மரணத்தில் தொடர்புடைய தாலுகா இன்ஸ்பெக்டர், சப் -இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், ராஜா மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசுப்பணி மற்றும் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், இதனை வலியுறுத்தி, அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி