திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி 27வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஷபியுல்லா ஏற்பாட்டில், வி.சி.,கட்சி வேட்பாளருக்கு பானை சின்னத்தின் ஆதரவு கேட்டு பிரசாரம் நடந்தது.விழுப்புரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க.,கூட்டணி சார்பில் போட்டியிடும் வி.சி.,கட்சி வேட்பாளர் ரவிக்குமாருக்கு ஆதரவாக நேற்று மாலை திண்டிவனம் 27 வது வார்டில் பானை சின்னத்திற்கு பொது மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினர்.காசாமியன் தெருவிலிருந்து துவங்கிய பிரசாரத்திற்கு, தி.மு.க.,வை சேர்ந்த திண்டிவனம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் ரமணன் தலைமை தாங்கினார்.27வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஷபியுல்லா, வி.சி.,கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில பொது செயலாளர் ஜப்பார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர தி.மு.க.,செயலாளர் கண்ணன், வார்டு செயலாளர் ஷாகுல்அமீது, இளைஞரணி ெஷரீப், அயலக அணி முஸ்தாபா, வழக்கறிஞர் மோகன், வி.சி.,கட்சி நகர செயலாளர் எழிலரசன், மகளிர் அணி பிருந்தா, தி.மு.க.,நிர்வாகிகள் பாபு, சலீம்,அசார், கண்ணன், தஸ்தகீர், மெக்கானிக் மோகன், ஜெயவேலு, சதாம்உசேன், அமானுல்லா, சமீர், சந்தோஷ், ரபி, இதாயதுல்லா, ரஷீத், பாரூக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நேரு வீதி, பூந்தோட்டம், காந்தி சிலை, தீர்த்தக்குளம் வழியாக தாலுகா அலுவலகம் எதிரில் பிரசாரம் முடிந்தது.