உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவர் பருவம் முதல் எங்களுக்குள் நட்பு வி.சி., வேட்பாளர் குறித்து அமைச்சர் பேச்சு

மாணவர் பருவம் முதல் எங்களுக்குள் நட்பு வி.சி., வேட்பாளர் குறித்து அமைச்சர் பேச்சு

விழுப்புரம்: 'மாணவர் பருவம் முதல் எங்களுக்குள் நட்பு உண்டு' என வி.சி., கட்சி வேட்பாளர் குறித்து அமைச்சர் பொன்முடி பேசினார்.விழுப்புரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில், மீண்டும் வி.சி., போட்டியிடுகிறது. இந்நிலையில் மூன்று மாத இடைவெளிக்குப் பின், மீண்டும் பதவியேற்ற உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, உற்சாகமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.விழுப்புரத்தில் தி.மு.க., கூட்டணி சார்பில் நடந்த கூட்டத்தில், அமைச்சர் பொன்முடி பேசுகையில், 'அண்ணாமலை பல்கலை கழகத்தில் நான் ஆய்வு படிப்பு மேற்கொண்டபோது, வி.சி., வேட்பாளர் ரவிக்குமார், சட்டம் பயின்று வந்தார். கல்லுாரி மாணவர் பருவம் முதலே எங்களுக்குள் நட்பு உண்டு. அரசியலில் நாங்கள் மாணவர் பருவம் முதல் பயணம் மேற்கொண்டு வருகிறோம்' என பழைய நினைவுகளை கூறி, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ