உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கால்நடை டாக்டரை கண்டித்து சாலை மறியல் போலீசார் பேச்சு வார்த்தை

கால்நடை டாக்டரை கண்டித்து சாலை மறியல் போலீசார் பேச்சு வார்த்தை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த நேமூரில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்காத டாக்டரை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விக்கிரவாண்டி அடுத்த நேமூர் கிராமத்தில் குமார் என்பவரது பசு மாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. கால் நடைக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் மோகனிடம் கூறிய போது மருத்துவ மனைக்கு சரி வர வருகை தராமலும், முறையான சிகிச்சை அளிக்காமல் காலம் கடத்தியுள்ளார். நீண்ட நாட்களாக இதே செயலில் டாக்டர் ஈடுபட்டு வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று பகல் 12 மணிக்கு இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமையில், பி.எஸ்.பாளையம் பாஸ்கர் உள்ளிட்ட விவசாயிகள் சுமார் 30 பேர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது பற்றி தகவலறிந்த கஞ்சனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கரவடிவேலு, ரவிச்சந்திரன் ஆகியோர் விவசாயிகளிடம் பேசி சமாதானம் செய்தனர்.இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு 12.15 மணிக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் 15 நிமிட போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை