உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டியில் டி.எஸ்.பி., அலுவலகம்: அரசாணை வெளியீடு

விக்கிரவாண்டியில் டி.எஸ்.பி., அலுவலகம்: அரசாணை வெளியீடு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் புதிய டி.எஸ்.பி., அலுவலகம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டசபை கூட்டத் தொடரில், விக்கிரவாண்டி தாலுகாவில் புதிய டி.எஸ்.பி., அலுவலகம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆனால், அதற்கான பணிகள் துவங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் 2 முறை செய்தி வெளியிடப்பட்டது.இந்நிலையில், விக்கிரவாண்டியில் புதிய டி.எஸ்.பி., அலுவலகம் தற்போது, விழுப்புரம் டி.எஸ்.பி., அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள விக்கிரவாண்டி, பெரியதச்சூர், கண்டமங்கலம், வளவனுார், விக்கிரவாண்டி போக்குவரத்து பிரிவு மற்றும் செஞ்சி டி.எஸ்.பி., கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனுார், கெடார் காவல் நிலையங்களை தனியாக பிரித்து புதியதாக துவங்க உள்ள விக்கிரவாண்டி டி.எஸ்.பி., அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும். மேலும் புதிய டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு புதியதாக இரண்டு பணியிடங்களை அறிவித்து, உள்துறை செயலாளர் அரசாணையை வெளியிட்டுள்ளனர்.இந்த அரசாணை வெளியீட்டை அடுத்து டி.ஐ.ஜி., திஷா மித்தல், எஸ்.பி., தீபக் சிவாச் ஆகியோர் ஆலோசனை செய்து அதற்கான பணிகளை விரைவில் துவங்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ