உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்

விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.ராதாபுரத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி வரவேற்றார். அமைச்சர் பொன்முடி, தலைமை தாங்கி, தி.மு.க., வேட்பாளர் சிவாவை அறிமுகம் செய்து பேசுகையில், 'வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிவா, இந்த இத்தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தருவார். அவரை லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., பேசுகையில், 'இடஒதுக்கீட்டு போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தி.மு.க ., அரசு நிதி உதவியாக 3 லட்சம் ரூபாய் வழங்கியது. ஆனால் போராட துாண்டியவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. இந்த தேர்தலில் ஜாதி பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டு வந்துள்ளனர். உதய சூரியன் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், 'தி.மு.க., வேட்பாளர் சிவாவை எதிர்த்து நிற்கும் பா.ம.க., வேட்பாளர் வாழ்த்து கூறிவிட்டு சென்றுள்ளார். அது எனக்கு தெரியும். இட ஒதுக்கீடு எனக் கூறி பா.ம.க.,வினர் டிராமா போடுகின்றனர். தேர்தல் நேரத்தில் மட்டுமே இடஒதுக்கீடு பற்றி பேசுகின்றனர். சிவா அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்' என்றார்.ரவிக்குமார் எம்.பி., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புஷ்பராஜ், ராமமூர்த்தி, மாவட்ட செயலர்கள் சவுரிராஜன், சுப்ரமணியன், இந்திய கம்யூ., சரவணன், வி.சி., நிர்வாகிகள் திலீபன், பொன்னிவளவன், ஒன்றிய சேர்மன்கள் சங்கீத அரசி ரவிதுரை, வாசன், இளைஞரணி பாரதி, எத்திராஜன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிதுரை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை