உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சீரான மின்சாரம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் மறியல்

சீரான மின்சாரம் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் மறியல்

விழுப்புரம்: :திண்டிவனம் அருகே சீரான மின்சாரம் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திண்டிவனம் அடுத்த அம்மணம் பாக்கம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உரசியபடி மிகவும் தாழ்வாக மின்கம்பிகள் செல்வதால் விபத்து அபாயம் இருப்பதாகவும், இங்குள்ள குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் சீரான முறையில் வழங்காததால் அடிக்கடி மின்சாதன பொருட்கள் பழுதாவதோடு, மின்தடை ஏற்படுகிறது.கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில், தாதாபுரம்-அம்மணம்பாக்கம் சாலையில் திடீர் மறியல் செய்தனர். இதை தொடர்ந்து மேல்ஆதனுார் பஞ்சாயத்து அதிகாரிகள் நேரில் வந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில், அரை மணி நேரம் நடந்த மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை