உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம்- கல்லப்பட்டு கூடுதல் அரசு பஸ் இயக்கம்

விழுப்புரம்- கல்லப்பட்டு கூடுதல் அரசு பஸ் இயக்கம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் இருந்து கல்லப்பட்டு கிராமத்திற்கு கூடுதல் அரசு பஸ் வசதி இயக்கும் நிகழ்ச்சி நடந்தது.வளவனுார் அடுத்த கல்லப்பட்டு கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் விழுப்புரம் பகுதி பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இதனால், கல்லப்பட்டு கிராமத்திற்கு கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.கோரிக்கையை ஏற்று, விழுப்புரத்தில் இருந்து கல்லப்பட்டு கிராமத்திற்கு கூடுதல் அரசு பஸ் வசதியை லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட கவுன்சிலர் கேசவன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, வழக்கறிஞர் கண்ணப்பன், நிர்வாகிகள் தவமணி, சவுந்தரராஜன், ஜெயபால், �தர், ஜெயந்தி ராஜகணேஷ், ஒன்றிய கவுன்சிலர் தேவி, ஊராட்சி தலைவர் மணிவேல், துணைத் தலைவர் ஜெயமாலினி, குமரவேல், கோபால் தாஸ், அருள், பூமிநாதன், தேவன், ராஜகுமாரி மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை