உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இடைத்தேர்தலில் திசை மாறிய ஓட்டுகள்: அ.தி.மு.க., தே.மு.தி.க., அதிர்ச்சி

இடைத்தேர்தலில் திசை மாறிய ஓட்டுகள்: அ.தி.மு.க., தே.மு.தி.க., அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கூறிய அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க.,வினரின் கனிசமான ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு சென்றது. இது இரு கட்சியினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலானது, 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்தது. அதனால், ஆளும் தி.மு.க., கூட்டணி தீவிரமாக களமிறங்கி தேர்தல் பணிகளை மேற்கொண்டது. இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் ஆதிக்கத்தால், நேர்மையாக தேர்தல் நடக்காது என்பதால், அ.தி.மு.க., தேர்தலை புறக்கணிப்பதோடு, அ.தி.மு.க.,வினர் யாருக்கும் ஓட்டு போட மாட்டார்கள் எனவும் தெரிவித்தனர். இதேபோல், தே.மு.தி.க., தரப்பிலும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.எப்போதும், இடைத்தேர்தலில் போட்டியிடாத பா.ம.க., தரப்பு, இந்த முறை முந்திக்கொண்டு பாஜ., கூட்டணியில் தேர்தலை சந்தித்தது. சொந்த மாவட்டம், அதிக செல்வாக்குள்ள தொகுதி என்பதாலும், தீவிரமாக களத்தில் இறங்கினர். தேர்தலில் போட்டியிடாத அ.தி.மு.க.,வின் ஓட்டுகளை பெறும் எண்ணத்தில், அன்புமணி உள்ளிட்ட பா.ம.க.,வினர், நேரடியாக ஜெயலலிதா புகழ்பாடி, அ.தி.மு.க.,வின் ஓட்டுகளை பெற முயன்றனர்.இதனால், தி.மு.க., தரப்பு அதிருப்தியாகி, தாராளமாக செலவிட்டு, தீவிர பிரசார களத்தில் இறங்கியது. இந்நிலையில், தேர்தல் முடிந்து, ஆளும் தி.மு.க., தரப்பு 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது. தேர்தலை அ.தி.மு.க., தே.மு.தி.க., புறக்கணித்துள்ளதால், அதன் தொண்டர்கள் பெரும்பாலும், நோட்டாவுக்கும், பா.ம.க., மற்றும் நாம் தமிழர் கட்சிக்கும் ஓட்டு போடுவார்கள் என பரவலாக பேசப்பட்டது.ஆனால், நோட்டாவுக்கு 859 பேர் என சொற்பளவில் ஓட்டளித்திருந்தனர். இதனால், இரு கட்சிகளின் ஓட்டுகள் நோட்டாவுக்கு போகவில்லை, தேர்தலையும் புறக்கணிக்கவில்லை, மாறாக தி.மு.க.,விற்கு ஓட்டு விழுந்துள்ளது, இது அ.தி.மு.க., தே.மு.தி.க., கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது ஓட்டுகளை எதிர்பார்த்த பா.ம.க., அப்செட் ஆகியுள்ளது.இது குறித்து அ.தி.மு.க., தரப்பில் கூறுகையில், 'இந்த இடைத்தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதால் புறக்கணித்தோம். விரும்புபவர்களுக்கு ஓட்டளிக்கலாம் என தலைமை கூறிவிட்டது. தேர்தலுக்கு முன், ஒன்றிய செயலாளர்கள் கூட்டம் நடத்திய மாவட்ட செயலாளர் சண்முகம், நமக்கு எதிரி தி.மு.க.,தான், அதுக்கு ஓட்டு போடாமல், உங்கள் விருப்பம் போல், யாருக்காவது ஓட்டு போடுங்கள் என்று கூறியிருந்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்களும், மறைமுகமாக பா.ம.க.,வுக்கு ஆதரவாக ஓட்டுபோடும்படி கூறியிருந்தனர்.ஆனால், தி.மு.க.,வுக்கு அதிகளவில் ஓட்டு சென்றுள்ளது. அதற்கு காரணம், இடைத்தேர்தல் என்றால், ஆளுங்கட்சியினர் தாராளமாக செலவிடுவதும், மக்கள் கட்சிகளை மறந்து, பணம் வாங்கி ஓட்டு போடுவதும் இயல்பாக மாறியுள்ளது. கட்சிகளை மீறி, சமூக ரீதியாகவும் ஓட்டுகள் பிரிந்துள்ளது' என்றனர்.- நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Durai Kuppusami
ஜூலை 16, 2024 08:26

அதிமுக தொண்டனையே பணம் வாங்கி ஓட்டு போட வச்சயெல்லாம் ஒரு தலைவனா நன்றாக .பலன் கிடைக்கும்


Murthy
ஜூலை 16, 2024 01:37

RK நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்து மூன்றாவது இடம் போனது அப்போது திமுக ஓட்டுகள் அதிக பணம் கொடுத்த தினகரனுக்கு சென்றது......விக்கிரவாண்டி இடை தேர்தலில் அதிமுக ஓட்டுகள் அனைத்தும் பணம் கொடுத்த திமுகவுக்கு சென்றதால்தான் அதிக ஓட்டுகளை திமுக பெறமுடிந்தது. இதிலிருந்து பணம் கொடுக்கவில்லை என்றால் இந்த இரண்டு கட்சிகளுக்கும் டெபாசிட் கிடைக்காத அளவுக்குத்தான் ஒட்டு வங்கி உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.


Anbuselvan
ஜூலை 15, 2024 22:06

அதிமுகவை சேர விடாமல் தடக்குப்பதுற்கு என சில கட்சிகள் அதை ஒரு ப்ராஜெக்ட் ஆக எடுத்து செய்து கொண்டு இருக்கின்றன.


Duruvesan
ஜூலை 15, 2024 21:54

பாஸ் எடப்பாடி சொல்லாமல் சொன்னது நமது ஓட்டு தீயமுகவுக்கே


SP
ஜூலை 15, 2024 21:36

முதலில் அதிமுக வை எடப்பாடியாரிடமிருந்து மீட்க வேண்டும்


S. Narayanan
ஜூலை 15, 2024 20:38

பண மயக்கம் தான். காரணம்


sankaranarayanan
ஜூலை 15, 2024 20:35

கொடநாடு எஸ்டேட்டின் விசாரணையின் எதிரொலிப்பு இனி விசாரணை சற்றே மாறும் அல்லது கிடப்பில் போடப்படும் சமயம் வரும்போது ட்ரம்ப் ஸீட்டாகா பயன்படுத்தப்படும் இதுகுதான் தமிழக்கத்தின் தலைவிதி


வீரபாண்டி,அலங்காநல்லூர்
ஜூலை 15, 2024 20:18

பிரேமலதா இனிமேலாவது அரசியல் அபிலாஷைகளை விட்டு விட்டு தன் குடும்ப (மான) த்தை காக்க முன் வர வேண்டும்


shyamnats
ஜூலை 15, 2024 20:17

வளரும் பா ஜ கா வை புறக்கணித்துதான் பாராளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வினார்கள் . அதன் பின்பும் அளவுக்கு மீறிய தலை கனத்தால் இடை தேர்தலிலும் புறக்கணித்து அடிவாங்கி உள்ளார்கள். இன்னும் பாடம் படிக்க விட்டால் வரும் 2026 தேர்தலிலும் கட்சி காணாமல் போகும். இதற்கு உதாரணமாக நோக்கியா ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தை புறக்கணித்து , வளர்ச்சி குன்றியதை பார்த்தோம்.


Tiruchanur
ஜூலை 15, 2024 20:17

எடப்பாடி எப்போதோ திமுகவின் அடிவருடி ஆகி விட்டார். அதிமுக ஓட்டுகள் திமுகவிற்கு விழுந்ததில் எந்த ஆஷ்சர்யமும் இல்லை. The vidiyal ஆட்சி இரண்டு கட்சிகளுக்கும் பொதுவானது


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி