உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வி.ஆர்.பி., மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்விலும் சதம்

வி.ஆர்.பி., மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்விலும் சதம்

விழுப்புரம்: விழுப்புரம் வி.ஆர்.பி., பள்ளி, பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சியடைந்து சாதனை படைத்துள்ளது.இப்பள்ளியில் தேர்வு எழுதிய 118 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவர்கள் கீர்த்திவாசன் 487, ஸ்ரீதரன், மித்ரா 478, மாணவி ஸ்ரீமதி 477 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றனர்.கணிதத்தில் 6 மாணவர்கள், சமூக அறிவியலில் 3 மாணவர்கள் உட்பட 9 பேர், 100க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி, பள்ளியின் தாளாளர் சோழன் கவுரவித்தார்.அரசு வழக்கறிஞர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர் அன்பு, வழக்கறிஞர் மனோ, கேபிள் 'டிவி'ஆப்பரேட்டர் சுரேஷ்பாபு, பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி, உதவி தலைமை ஆசிரியர் பிரித்திவிராஜ் மற்றும் ஆசிரியர்களும், மாணவர்களை பாராட்டி, வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ