உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படுமா? அ.தி.மு.க., கவுன்சிலர் ஆதங்கம்

பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்படுமா? அ.தி.மு.க., கவுன்சிலர் ஆதங்கம்

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி யில் 1வது வார்டில் பாதாள சாக்கடைத் திட்டம், கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க., கவுன்சிலர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் நகராட்சி 1வது வார்டு கவுன்சிலர் கோல்டு சேகர் கூறியதாவது: கிராம ஊராட்சிகளாக இருந்து, நகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதியில், பாதாள சாக்கடைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆனால், ஏற்கனவே நகராட்சியில் 1வது வார்டு பகுதியில் மட்டும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் துவங்கப்படவில்லை. இதற்கு போதிய நிதி ஒதுக்கீடு வரவில்லை என நீண்ட காலமாக காலம் தாழ்த்தி வருகின்றனர்.மேலும், தெரு மின் விளக்கு முறையாக பராமரிப்பதில்லை. பல இடங்களில் எல்.இ.டி., மின் விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. வார்டில் பல பகுதிகளிலும் குடிநீர் சப்ளை சரிவர மேற்கொள்ளப்படவில்லை.கோடைகாலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காட்பாடி ரயில்வே கேட் மேம்பாலம் அருகே மேல்தெரு பஸ் நிறுத்தத்தில், பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.இதேபோல், ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் 1வது வார்டு மக்களின் அடிப்படை வசதிகளை தீர்த்து வைக்க நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கவுன்சிலர் கோல்டு சேகர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ