உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பூத் சிலிப் வழங்குவதில் மெத்தனம்; மாவட்ட தேர்தல் அதிகாரி கவனிப்பாரா?

பூத் சிலிப் வழங்குவதில் மெத்தனம்; மாவட்ட தேர்தல் அதிகாரி கவனிப்பாரா?

லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை ஏற்படுத்திட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில், வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, பூத் சிலிப் வழங்கும் பணி கடந்த 1ம் தேதி முதல் துவங்கியது. இந்தபணி, 13ம் தேதி முடிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்திருந்தார்.ஆனால் விழுப்புரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், நிர்ணயித்த கெடுவைத் தாண்டியும் பெரும்பாலான வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படாமல் உள்ளது. பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் தங்கள் சொந்த வேலையை முடித்த பிறகு, பூத் சிலிப் வழங்குகின்றனர். இதனால், காலக்கெடுவைத் தாண்டியும் பல பகுதிகளில் நேற்று வரை பூத் சிலிப் வழங்கப்படாமல் உள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர், பூத் சிலிப் வழங்கும் பணி குறித்து ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரியை தொடர்பு கொண்டு, ஓட்டுப்பதிவு நடைபெறும் 19ம் தேதிக்குள் பூத் சிலிப்பை அனைத்து வாக்காளர்களுக்கும் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை