உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு கூரை அமைக்கப்படுமா?

செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு கூரை அமைக்கப்படுமா?

செஞ்சி:விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள மார்க்கெட் கமிட்டிக்கு, தமிழகத்திலேயே அதிக அளவில் நெல் வரத்து உள்ளது. தென் மாவட்ட வியாபாரிகள் இங்கு அதிகளவில் நெல் கொள்முதல் செய்வதால் கூடுதல் விலை கிடைக்கிறது. இதனால், விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சுற்று வட்டார மாவட்ட விவசாயிகளும் இங்கு நெல் கொண்டு வருகின்றனர்.அதற்கேற்ப மார்க்கெட் கமிட்டியில் இடவசதி இல்லாததால், திறந்தவெளி களத்தில் ஏலம் நடத்துகின்றனர்.இந்நிலையில், 8ம் தேதி பெய்த திடீர்மழையில், ஏலத்திற்காக வைத்திருந்த விவசாயிகளின் 4,000 நெல் மூட்டைகளும், வியாபாரிகளின் 2,000 நெல் மூட்டைகளும் நனைந்ததால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.எனவே, செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் ஏலக் கூடங்களுக்கு மேற்கூரை அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தர தீர்வு காண மார்க்கெட் கமிட்டியை விரிவாக்கம் செய்ய வேண்டும்.மார்க்கெட் கமிட்டிக்கு கிழக்கில் 2 ஏக்கர் அளவிற்கு அறநிலையத்துறையின் இடத்தை குத்தகைக்கு பெற்றும், தெற்கில் 2 ஏக்கர் அரசு புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றியும் மார்க்கெட் கமிட்டியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை