உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நெஞ்சு வலியால் தொழிலாளி சாவு

நெஞ்சு வலியால் தொழிலாளி சாவு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 47; கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை 5:30 மணியளவில் மன்னாதன் என்பவரது தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ஜானகிராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை