உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோழிகள் திருட்டு   வாலிபர் கைது

கோழிகள் திருட்டு   வாலிபர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோழிகளை திருடிய வழக்கில் வாலிபரை கைதுசெய்தனர்.விழுப்புரம் அருகே பானாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் உதயன்,29; இவர், அதே பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இந்த பண்ணையில் இருந்த 60 நாட்டு கோழிகள் கடந்த 24ம் தேதி திருடு போயுள்ளது.இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். இது குறித்து உதயன், விழுப்புரம் தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து நாட்டு கோழிகளை திருடிய சாலை அகரம் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் ராகுல்,20; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ