உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காப்பர் ஒயர் திருடிய வாலிபர் கைது

காப்பர் ஒயர் திருடிய வாலிபர் கைது

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே மின் மோட்டாரில் காப்பர் ஒயர் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த துலுக்கபாளையத்தை சேர்ந்த வரதராஜன் மகன் பத்மநாபன், 38; விவசாயி. இவர் நேற்று மாலை 5:15 மணியளவில் அதே பகுதியில் உள்ள இவரது விவசாய நிலத்திற்கு மோட்டார் போடுவதற்காக சென்றார். அப்போது இவரது நிலத்தில் வாலிபர் ஒருவர் விரகை வைத்து காப்பர் ஒயரை கொளுத்திக் கொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த பத்மநாபன் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார். அதில் அவர் ஒட்டணந்தல் கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன் மகன் சசிகுமார், 24; என்பது தெரியவந்தது. மேலும் சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரை விசாரித்தபோது அவர் பத்மநாபன் விவசாய நிலத்தில் காப்பர் ஒயர்களை திருடி கொளுத்தியதை ஒப்புக்கொண்டார். இதையெடுத்து போலீசார் வழக்கு பதிந்து சசிகுமாரை, 24; கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ