உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில்வே பொருட்களை திருடிய வாலிபர் கைது

ரயில்வே பொருட்களை திருடிய வாலிபர் கைது

திண்டிவனம் : திண்டிவனம் அருகே ரயில்வே தளவாட பொருட்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் தேசி தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை திண்டிவனம் - முண்டியம்பாக்கத்திற்கு இடையே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, ரயில்வே பணிகள் நடைபெற்று வரும் இடத்திலிருந்த ரயில்வேக்கு சொந்தமான இரும்பு தளவாட பொருட்களை திருடிக்கொண்டிருந்த வாலிபரை பிடித்தனர்.விசாரணையில், புதுச்சேரி மாநிலம், திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டைச் சேர்ந்த ஏழுமலை மகன் பிரகாஷ், 27; என தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, அவர் ஓட்டி வந்த ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை